Friday 10 May 2013

வாழ்ந்த்து காட்டும் கமலஹாசன் கௌதமி


நான் ஒன்றும் அதி தீவிர சினிமா ரசிகை அல்ல.       சினிமாக்காரர் பற்றி எனக்கு அதிகம் தெரிந்து இருப்பதும் இல்லை.  இணையத்தில் உலவிக் கொண்டிருந்தபோது எதேச்சையாக கமல், கௌதமி இணைந்தது கண்ணில் பட்டது.  இருவருக்கும் தனித்தனியான கடந்தகாலங்கள் இருந்த்தன.  கடந்த்தகாலம் கடந்தகாலமாகவே முடிந்த பின்பு, தொக்கி நிற்க்கும் எதிர் காலத்தை சோகமும் ஏக்கமும் நிறைந்ததாகக் கழிக்க விரும்பாமல் மகிழ்ச்சியுடனும் நிறைவுடனும் வாழ விரும்பும் இருவர் எடுத்துக் கொண்ட ஆரோக்கியமான முடிவு அது.

இணையத்தில் உலவியபோது என் கண்ணில் பட்டது கமல் கௌதமி இணைந்த செய்தி மட்டும் அல்ல.  அவர்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கிரார்கள் என்ற முறைப்பாடுகளும் தான்.

அந்த முறைப்பாடுகள் தான் எனக்கு சற்று நெருடலாக இருக்கின்றன.  இங்கு வெள்ளைக் காரர் மத்தியில் இது எல்லாம் சகஜம்.  உடனேயே தொடங்கி விடுவோமே, “வெளைக்காரர் எல்லாம் சீரழிந்து போகும் கலாச்சாரத்தைக் கொண்டவர்கள், ஆனால் தமிழர்களாகிய நாமோ கட்டுக்கோப்பான கலாச்சாரத்தைக்கொண்டவர்கள்” , என்று.  எழுந்தமானத்துக்கு இப்படி ஒற்றைவரியில் கூறிவிட்டால் சரியா?

மறுக்க முடியாத கசப்பான உண்மை ஒன்று உண்டு.  அளவுக்கு அதிகமான பாலியல் வல்லுறவுகள் நடைபெறுவது கட்டுக்கோப்பான கலாச்சாரமுடைய கீழைத்தேசங்களில்தான்.  பூர்த்தி செய்யப்படாமல் அடக்கி வைக்கப் படும் பாலியல் உணர்வுகளும் தேவைகளும் தான் இத்தகைய பாலியல் வல்லுறவுகளுக்கு வழிகோலுகின்றன.  இப்படியான மோசமானவர்களாகத் தாங்கள் மாறிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் வெள்ளைக்காரர்கள் கட்டுப்பாடுகள் குறைந்த இலகுவான வாழ்க்கை முறையை வாழ்கின்றார்கள்.

இந்த வகையில் கமலகாசன், கௌதமி தேர்ந்தெடுத்திருக்கும் இப்புதிய வாழ்க்கை முறையை குறை சொல்ல எனக்கு மனம் வரவில்லை.  சாதாரணமாக ஒரு பிரபல்யமான நடிகரின் நடை, உடை, பாவனைகள் அவரது ரசிகர்களால் பின்பற்றப் படுவத்து வழக்கம்.  அந்த வகையில் அவரது வாழ்க்கை முறைபின்பற்றப்படவும் சாத்தியம் உண்டு.

காலப் போக்கில் அழுத்தங்கள் அற்ற இலகுவான வாழ்க்கை முறை கீழைத்தேசங்களிலும் வரக்கூடும்.  துணிவுடன் புதுமை புகுத்துகின்ற கமல்ஹாசன் கவுதமிக்கு என் வாழ்த்துக்கள்.






6 comments:

  1. வேண்டாமம்மா...........வேண்டாம்.........

    ReplyDelete
    Replies
    1. கண்ணியமான வார்த்தைகளால் எதிர்த்தமைக்கு நன்றி

      Delete
  2. இருவருமே ஏற்கனவே பிரிந்து வாழ்வதால், முறையாக திருமணம் செய்து வாழ்ந்தால், விமர்சனத்துக்கு இடமிருந்திருக்காது, என்பது என் கருத்து.
    திருமண வாழ்வு கசந்தது, இந்த கூட்டு வாழ்க்கை இனிக்கிறது, சிறந்தது எனும் பிசத்தலையும், கமல் நிறுத்தினால் நன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  3. அவர்கள் திருமணம் செய்யாவிட்டாலும் நேர்மையாக வாழ்கின்றார்கள்.
    ஆனால் இதை அபச்சாரம் என்று விமர்சிப்பவர்கள் தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு கேவலமாக வாழ்கின்றனர் என்பது பலருக்கு தெரியும்

    ReplyDelete
    Replies
    1. உணமைதான். கட்டுப்பாடுகள் கூடக்கூடத் திருட்டுத்தனம் செய்யவேண்டிய அவ்சியமும் வந்துவிடுகின்றது.

      Delete