Friday 17 April 2015

என் மனைவிக்கு நான் நிறைய சுதந்திரம் கொடுத்திருக்கிறேன்

"என் மனைவிக்கு நான் நிறையச் சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன் ", என்று முற்ப்போக்குச் சிந்தனையுள்ள ஆண்கள் பலர் பெருமையாகச் சொல்வதைப் பல தடவைகள் கேட்டிருக்கின்றேன்.  அது ஏனோ அந்தக் கூற்றில்  தப்பிருப்பதாகவே எனக்குத் தோன்றும்.  .  " என் மனைவிக்கு நான் நிறையச் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் என்ற வாக்கியத்தில் அதிக அளவில் ஆணாதிக்கமே எனக்குத் தெரிந்தது.  உண்மையைச் சொல்வதானால் அப்படிச் சொல்பவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாக இருக்கும்.

" என் மனைவியின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை ", அல்லது என் மனைவியின் சுதந்திரத்திற்கு நான் இடையூறு விளைவிப்பது  இல்லை".  என்று கூறக்கூடியவர்கள் யாராவது இருந்தால் அவர்களே ஆணாதிக்க மனப்பான்மை இல்லாத கண்ணியவான்கள் ஆவார்கள்.