Saturday 20 February 2021

நாகரீக மோகத்தை மிஞ்சிய தாய்மை

சாதாரண பரிசோதனைக்காய் வைத்தியர் இல்லம் வரை செல்லவேண்டிய இருந்தது.  வாசலிலேயே சனரைசர் வைத்திருந்தார்கள்.  அதில் கையை சுத்தம் பண்ணிக்கொண்டு தான் உள்ளே நுழைந்தேன்.  அதிக நேரம் இருக்க வேண்டி இருந்ததால் இடையே ஓய்வறையும் செல்லவேண்டி இருந்தது.  அங்கும் வாசலில் சனடைசர் இருந்ததால் மீண்டும் கையை சுத்தம் பண்ணினேன்.  ஒரு அரைமணி நேர இடைவெளியில் இரண்டு தரம் சனரைசர் பாவித்து கையை சுத்தம் பண்ணியது மனதுக்கும் சௌகரியமாக இருக்கவில்லை.  கைவிரல்களின் தோலுக்கும் சௌகரியமாக இருக்கவில்லை.

அந்த அசௌகரியம் எனக்கு அவளை நினைவூட்டி யது.  அவள் கவர்ச்சிகரமான நவ நாகரீக உடை அணிவதில் அலாதி பிரியம் உடையவள்.

அவள் உடையணியும் பாங்கு பல வயதானவர்களால் பலமுறை விமர்சிக்கப்பட்டிருக்கிறது.  ஆடை விடயத்தில் மட்டுமல்லாது வாழ்க்கை முறையில் கூட நவநாகரீகமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுபவள்.

பெற்றோர் தேர்ந்தெடுக்கிற மாப்பிள்ளைகள் அவளுக்கு பிடிக்கவில்லை.  அவள் விரும்புகின்ற மாப்பிளை களை பெற்றோருக்கு பிடிக்கவில்லை.  இந்த போராட்ட த்தில் பெற்றோருக்கு திருப்தி இல்லாத வேற்று நாட்டுக்காரனை, கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாத மதத்தையும் கலாச்சாரத்தையும் சேர்ந்த ஒருவனை கரம்பிடித்தாள்.  அவள் ஆசைப்பட்டது போலவே செக்க செவேலென அழகாக நாகரீக உடை அணிபவனாக அவன் இருந்தான்.  கோபத்தில் பெற்றோர் ஒதுக்கி வைக்க தனியாக வாழ்க்கையை ஆரம்பித்தாள்.  சிறிது காலம் இடையூறின்றி இளமையை சுவைத்துவிட்டு திட்டமிட்டு கருவுற்றாள்.

ஆனால் வைத்தியர் குண்டை தூக்கி போட்டார்.  குழந்தையின் இதயம் ஆரோக்கியமாக இல்லை அதனால் கருவிலேயே அழித்துவிடும்படி சொன்னார்.  அவளுக்கு பிள்ளையை அழிக்க மனசு வரவில்லை.  பெற்டுக்க முடிவுசெய்தாள்.  கணவன் மட்டும் துணையாக இருக்க நோயாளி குழந்தையை பெற்றெடுத்தாள்.  குழந்தையின் ஆயுள் இரண்டு வருடம் தான் என்று வைத்தியர் சொன்னார்.

ஆனாலும் குழந்தை ஐந்து வருடங்கள் உயிர்வாழ்ந்தது.  இடையை கோபம் விடுத்து பெற்றோர் ஒத்தாசைக்கு வந்தாலும் நோயாளிக்குழந்தையுடன் அளவுக்கு அதிகமாக போராட வேண்டி இருந்தது அவளுக்கு. குழந்தையை ஒவ்வொரு தடவை தொடும் போதும் சனரைசர் பாவித்து கைகளை சுத்தம் பண்ணித்தான் தொட வேண்டும் என்பது வைத்தியர்களால் அவளுக்கு இடப்பட்ட கட்டளை. குழந்தைக்கு உணவூட்டவும் சுத்தம் செய்யவும் உடைமாற்றவும் வருடிக்கொடுக்கவும் என்று ஒரு நாளைக்கு எத்தனை தரம் அவள் குழந்தையை தொடுவாள்.  அத்தனை தரமும் சனரைசர் பாவிப்பதென்றால் சும்மாவா?  அதுவும் ஒருநாள் கூட ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள்.  குழந்தையின் சாவு வீட்டிற்கு சென்றிருந்த போது அவள் விரல்களை பார்த்தேன்.  அதிக நேரம் செலவழித்து நகங்களை பராமரித்து, வண்ண வண்ண நகச்சாயம் பூசி, கிறீம் பூசி பஞ்சுபோல் இருந்த அழகான உள்ளங்கைகளையும் விரல்களையும் காணவில்லை. சனற்ரைசரால் தோல் உரிந்து, ரேகை அழிந்து, காய்ந்து வரண்டு போன கைவிரல்களால் தன் கண்ணீரை துடைத்துக்கொண்டிருந்தாள்.

அந்த தாய்மையின் பொறுமையையும் சகிப்பு தன்மையையும் வியந்து மதித்தேன்.  அவள் கண்கள் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாலும் ஒரு தேவதையை ஐந்து வருடங்கள் பொத்தி பொத்தி பாதுகாத்து அழகாக வழியனுப்பி வைத்த மனநிறைவு தெரிந்தது.  அந்த தாய்மையின் விரல்களுக்கு  ஓய்வு கிடைக்கட்டும் என்று மனதினுள் எண்ணிக்கொண்டேன்.