Tuesday 11 July 2017

பிக் பாஸ் மாந்தர்கள் - கணேஷ் வெங்கட் ராமன்

Bildergebnis für கணேஷ் வெங்கட்ராமன் நல்ல கட்டுடல்

நல்ல ஆணழகன்

கூட இருப்பவருக்கு எரிச்சல் மூட்டத நடத்தை

யாருக்கும் இடஞ்சல் இல்லை

யாரையும் கிண்டல் செய்வது இல்லை

பிக் பாஸ் வெற்றியாளராக வருவதற்கு வாய்ப்புக்கள் உண்டு

ஆனாலும் உங்கள் நடத்தையில் இதுவரையில் இரண்டு விடயங்கள் உறுத்துகிறது.

பரணி என்னும் ஒரு ஆன்மா அனைவராலும் ஒதுக்கப்பட்டு தவித்து துவண்டு கொண்டிருக்கிறது.

ஆதரவான ஒரு வார்த்தைக்காக அது ஏங்கிக் கொண்டிருக்கிறது.

இத்தனை காலமும் நன்னடத்தையை காட்டியவர் நீங்கள்.

பரணிக்கு அரவணைப்பு காட்டாததின்  மூலம் முதல் முதலகாக நீங்கள் ஒரு கரும் புள்ளியை உங்களது ஆக்கிக் கொண்டீர்கள்

அடுத்து பரணியின் ஒழுக்கத்தை காயத்திரி குரூப் குறை கூறிக்கொண்டிருக்கிறது.  அப்போது நீங்கள் சொன்ன வார்த்தை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மனதை வருடவில்லை.  மாறாக கேட்டுக்கொண்டிருந்த பரணியின் மனதை குத்திக் கிழித்திருக்கும்.

இங்குள்ள பெண்களுக்கு நான் பாதுகாப்பு கொடுப்பேன்.  என்று ஒரு வீர வசனம் சொல்லி பரணியை வில்லனாகவும் உங்களை ஒரு ஹீரோ வாக்கவும்  முயன்றீர்கள் .  இது உங்களுக்கு நீங்களே தேடிக்கொண்ட இரண்டாவது கரும் புள்ளி.

ஹீரோ என்பவன் யார்?  இக்கட்டான சமயங்களில் துணிந்து முடிவெடுப்பவன்.  நிஜ வாழ்வின் ஹீரோவுக்கு.  கட்டுடல் தேவையில்லை. சிக்ஸ் பாக்ஸ் தேவையில்லை என்பதை நடிகர் விஜய் சேதுபதி ஒருமுறை கூறியிருக்கிறார்.  அது உண்மைதான்.

அனைவராலும் கைவிடப்பட்டு புற் தரையில் உருண்டு புரண்டு கொண்டிருந்த பரணி அருகில் சென்று அவர் கையைப் பிடித்து இதமாக அழுத்தி சற்று பொறுத்திரு நண்பா. எல்லாம் சரியாகி விடும், என்று ஆறுதலாக ஒரு வார்த்தை கூறி அடுத்த அழைப்பு வரும் வரையில் அவருக்கு துணையாக அவர் அருகில் இருந்திருந்தீர்களானால்,  அத்தனை கோடி தமிழ் மக்கள் மனதிலும் இடம் பெற்றிருப்பீர்கள் நண்பா.  இது தானே வீரம்.  இந்த வீரம் ஏன் உங்களுக்கு இருக்கவில்லை.  இந்த வீரத்துக்கு கட்டுடலும் சிக்ஸ்பக்கும் யோக பயிற்சியும் தேவையில்லை நண்பா.

காயத்திரி ரகுராமன் ,  ஆர்த்தி , சினேகன் போன்ற ஈனப் பிறவிகளிடம் இந்த நடத்தையை நான் எதிர்பார்க்கவில்லை நண்பா.  ஆனால் உங்களிடம் எதிர்பார்த்தேன் நண்பா