"என் மனைவிக்கு நான் நிறையச் சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன் ", என்று முற்ப்போக்குச் சிந்தனையுள்ள ஆண்கள் பலர் பெருமையாகச் சொல்வதைப் பல தடவைகள் கேட்டிருக்கின்றேன். அது ஏனோ அந்தக் கூற்றில் தப்பிருப்பதாகவே எனக்குத் தோன்றும். . " என் மனைவிக்கு நான் நிறையச் சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் என்ற வாக்கியத்தில் அதிக அளவில் ஆணாதிக்கமே எனக்குத் தெரிந்தது. உண்மையைச் சொல்வதானால் அப்படிச் சொல்பவர்களைக் கண்டால் எனக்கு எரிச்சலாக இருக்கும்.
" என் மனைவியின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதில்லை ", அல்லது என் மனைவியின் சுதந்திரத்திற்கு நான் இடையூறு விளைவிப்பது இல்லை". என்று கூறக்கூடியவர்கள் யாராவது இருந்தால் அவர்களே ஆணாதிக்க மனப்பான்மை இல்லாத கண்ணியவான்கள் ஆவார்கள்.